அஜித்குமார் நடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியிடப்படும். மார்க் ஆண்டனி பட வெற்றிக்குப் பிறகு, இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் அஜித்குமாருடன் திரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில், இந்தப் படத்துக்காக வெளிநாடுகளில் சென்சார் சான்றிதழ் பெறப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு, இது வித்தியாசமான திரைக்கதை கொண்டது மட்டுமல்லாமல், அதில் அஜித் மிகச் சிறப்பாக நடித்துள்ளதாகவும் பாராட்டியுள்ளனர். இந்த விஷயம் படக்குழுவை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது..