Wednesday, December 18, 2024

அன்று நான் வாங்கிய அடிகளும் அவமானங்கள் தான் என்னை நடிகனாக்கியது – சமுத்திரக்கனி OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரு. மாணிக்கம் திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய சமுத்திரக்கனி, தனது துவக்க காலத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார். நான் முதலில் ஒரு சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போயிருந்தேன். அப்போது மிகவும் ஒல்லியாக இருந்தேன். ஒரு காட்சியில் நடிகர் என்னை உதைக்க வேண்டும் எனக் கதை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இயக்குநர் அதை மிகுந்த அதிரடியாக சொல்லி, ‘நீ உதைக்கும் போது, அவன் வெளியே போய் விழவேண்டும். சினிமாவை நினைப்பதே தவிர்க்க வேண்டும்’ எனக் கூறினார். அதன் பின் அந்த நடிகர் என்னை மிதிமிதியென மிதித்தார்.

அந்த காட்சியில் நான் பலமுறை மிதி வாங்கினேன். ஆனால், அந்தக் கனவை நான் ஒருபோதும் விட்டுவிடவில்லை. அதன்பின், அந்த இயக்குநரிடமே நான் வேலை பார்த்தேன். அவர் என்னை விடவில்லை. இன்று, என்னை மிதித்த அந்த நடிகர், என்னை பார்த்தால் மன்னிப்பு கேட்கிறார்.அன்று நான் சந்தித்த அவமானமும் மிதியினாலும், இன்று நான் நடிகராகவும் இயக்குநராகவும் வளர்ந்துள்ளேன். நேர்மையும் உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவில் எனது பயணத்தை தொடர்ந்தேன், இன்னும் அதைத்தான் பின்பற்றுகிறேன்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

- Advertisement -

Read more

Local News