Touring Talkies
100% Cinema

Tuesday, June 3, 2025

Touring Talkies

கவனத்தை ஈர்க்கும் தக் லைஃப் படத்தின் விண்வெளி நாயகா பாடல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் தக்லைப். இந்த படம் வரும் ஐந்தாம் தேதி திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள விண்வெளி நாயகா என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை ஸ்ருதிஹாசன் பாடியிருக்கிறார். பாடலின் ராப் பகுதியை பிரசாத் வெங்கட் எழுதியிருக்க, அதை ஏ.ஆர். அமீன் பாடியுள்ளார். இந்தப் பாடல், கமல்ஹாசன் மற்றும் திரிஷாவை மையமாகக் கொண்ட ரொமான்டிக் பாடலாகும் என கூறப்படுகிறது.

“விண்வெளி நாயகா, விடியல் வீரா, உயிரின் மேல் விரிந்திடவா வா…” என தொடங்கும் இந்தப் பாடல் தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இது தொடர்பான தகவல்களையும், புகைப்படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News