நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அரபிக் குத்து’ பாடல், வெளியான உடனே சூப்பர் ஹிட் ஆனது. யூடியூப் தளத்தில் மிக குறைந்த நேரத்திலேயே 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, ஒரு ஆண்டிற்குள் 500 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டியது.
முதலில், லிரிக் வீடியோ 500 மில்லியன் பார்வைகளை அடைந்தது. அதன் பிறகு, சில மாதங்களில் முழு வீடியோ பாடலும் 500 மில்லியன் பார்வைகளைத் தாண்டியது. தமிழ் சினிமா பாடல்களில், இதுவரை இரண்டு விதமான வீடியோ வடிவங்களும் 500 மில்லியனை கடந்து சாதனை படைத்தது இதுவே முதன்முறை. தமிழ் திரையுலகில் இதுவரை நான்கு பாடல்கள்தான் 500 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளன. அவை,
‘ரவுடி பேபி’ – (மாரி 2, யுவன் இசை)
‘அரபிக் குத்து’ – (பீஸ்ட், அனிருத் இசை)
‘டம் டம்’ – (எனிமி, தமன் இசை)
‘வாத்தி கம்மிங்’ – (மாஸ்டர், அனிருத் இசை)
தற்போது, ‘அரபிக் குத்து’ பாடலின் முழு வீடியோ 700 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.