தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகர்களாக சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஒருபுறம், பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண் போன்ற இளம் முன்னணி ஹீரோக்கள் மற்றொறுபுறம் தங்கள் முத்திரையை பதித்துள்ள நிலையிலும், எந்த போட்டியும் இல்லாமல் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி, தொடர்ந்து வெற்றி நடைபோட்டு வருபவர் நடிகர் ரவிதேஜா.
தெலுங்கு திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளாக தனது நிலைபாடை நிலைநிறுத்தி வரும் இவர், இதுவரை 75 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, அவர் நடிக்கவுள்ள 76வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தப் படத்தை இயக்குநர் திருமலா கிஷோர் இயக்கவிருக்கிறார். மேலும், இந்தப் படம் 2026ம் ஆண்டு சங்கராந்தி பண்டிகை வெளியீடாக வர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.