எழில் இயக்கியுள்ள ‘தேசிங்குராஜா 2’ படத்தில் விஜய் டிவி புகழ், பெண் வேடத்தில் அதுவும், போலீசாக நடித்து இருக்கிறார். டப்பிங்கில் மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் கூட பெண்குரலில்தான் டயலாக் பேசி இருக்கிறார். விமல், பூஜிதா நடிக்கும் இந்த படம் அடுத்த மாதம் 11ல் ரிலீஸ் ஆகிறது. தேசிங்கு ராஜா முதல் பாகத்தில் நடித்த பிந்துமாதவி, சூரி உள்ளிட்ட பலர் இதில் இல்லை. ரவிமரியா, சாம்ஸ் இருக்கிறார்கள்.
