Touring Talkies
100% Cinema

Saturday, August 2, 2025

Touring Talkies

அந்த பட வாய்ப்பை நிராகரித்தது இதற்காக தான்… விக்ரம் வேதா பட நயாகி டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழில், ‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘மாறா’, ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் இவர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது, ரவி தேஜா முல்லபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெக்கானிக் ராக்கி’ படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இப்படத்தில், விஷ்வக் சென், மீனாட்சி சவுத்ரி மற்றும் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில், ‘மெக்கானிக் ராக்கி’ படத்தின் நடிகர் விஷ்வக் சென், தனது 2019ஆம் ஆண்டு இயக்கி நடித்த ‘பலக்னுமா தாஸ்’ படத்துக்காக ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதல் தேர்வாக இருந்ததாக கூறினார். ஆனால், அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் என்றார். இதுகுறித்து, ஷ்ரத்தா ஸ்ரீநாத் அண்மையில் விளக்கம் அளித்துள்ளார். “பலக்னுமா தாஸ்’ படத்தில் எனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்க வேண்டிய காரணம் எனக்கு தெரியவில்லை. அதுதான் அந்த வாய்ப்பை நிராகரிக்க நான் எடுத்த முடிவின் பின்னணி,” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News