துபாயில் நடைபெற்ற ‘Dubai Watch Week’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் தனுஷிடம், உங்களுக்கு பிடித்த முதல் வாட்ச் எது? என்று கேட்டபோது, “அம்மா பள்ளியில் படிக்கும் போது வாங்கி கொடுத்த வாட்ச்தான் எனக்கு முதல் ஆசையைக் கொடுத்தது. அது டாலரின் விலைக்கும் குறைந்த பிளாஸ்டிக் வாட்ச்.

அந்த வாட்ச் லைட் எரியும், சின்ன பேட்டரியுடன் வந்தது. நான் எளிய பின்னணியில் இருந்து வந்தவன். பேட்டரி முடிந்தால் வேலை செய்யாது. பல நிறங்களிலான அந்த வாட்சை நான், என் அக்கா மாறி மாறி கட்டிக்கொள்ளுவோம்.
பேட்டரி முடிந்து நேரம் காட்டாதபோதும் ஸ்கூலுக்கு அதையே கட்டிச் செல்வேன். இன்றும் அந்த வாட்சை பத்திரமாக வைத்திருக்கிறேன். எனக்கு மறக்க முடியாத, மிகவும் பிடித்த வாட்ச் அது தான் என்று உணர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

