தனுஷ் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘இட்லி கடை’. இந்தப் படத்தை ‘டான் பிக்சர்ஸ்’, ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’, ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்.இந்தப் படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நித்யா மேனன் கூறுகையில், “இந்தப் படத்தில் முதன்முறையாக நான் என் கைகளால் மாட்டு சாணத்தை எடுத்தேன். இது எனக்கு புதுமையான அனுபவம். தேசிய விருதைப் பெறும் ஒரு நாளுக்கு முந்தைய நாள் அந்த காட்சியை நடித்தேன்.
விருதைப் பெறும் தருணத்தில் என் நகங்களில் மாட்டு சாணம் இருந்தது. அது எனக்கு விருதை கைகளில் ஏந்தும் போது நினைவாகவும் உள்ளது” என்றார். ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷுடன் நடித்த நித்யா மேனன், சமீபத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.