Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தும் தமன்… அதுவும் அதர்வா நடிக்கும் படத்தில் நடிக்கிறாரா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தமன். தமிழிலும் பல படங்களுக்கு இசையமைத்திருந்தார். தனக்கான ஒரு உறுதியான இடத்தை சமீபத்தில் தான் பிடித்து உள்ளார். அவருடைய இசையில் வெளியான ‘வாரிசு’ படத்தின் பாடல்கள் அவருக்கு மிகப்பெரிய ஹிட் அடையாளமாக அமைந்துள்ளன.

தமிழ் திரையுலகில் தமன் முதன்முதலில் ஒரு நடிகராக அறிமுகமானார். ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில், ஐந்து கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார். ஆனால், அதன்பிறகு நடிப்பதைத் துறந்து, இசையமைப்பில் முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிகராக திரும்பியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதர்வா நடிக்கும் புதிய படத்தில், தமனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ் சினிமாவில், விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், முன்னணி நடிகர்களாகவும் வலம் வருகின்றனர். ஆனால், இவர்களுக்குமுன், தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான முதல் இசையமைப்பாளர் தமன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News