தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். அவரின் நடிப்பில் 2000ம் ஆண்டு மே 19ஆம் தேதி வெளியான படம் குஷி. இதில் ஜோதிகா, விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கினார்.

காதல் கதையை மையமாகக் கொண்டு வெளிவந்த இப்படம், மக்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக, விஜயின் திரைப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படமாகக் கருதப்படுகிறது. உலகளவில் அப்போது ரூ.22 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது குஷி.
இந்நிலையில், இப்படம் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாக உள்ளது. வருகிற செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் ரீ–ரிலீஸ் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.