பழைய படங்களின் ரீ ரிலீஸ் என்பது சமீப காலமாக ட்ரெண்டாக உள்ளது.இதற்கு முன்னதாக ‘கில்லி’, ‘வாரணம் ஆயிரம்’, ‘3’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.அடுத்ததாக, ‘சச்சின்’ மற்றும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆகிய படங்களும் திரும்ப வெளியிடப்பட உள்ளன.

இந்த நிலையில், 2003ம் ஆண்டில் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய், ரீமா சென், வடிவேலு, ஜெய் உள்ளிட்ட பலர் நடித்த ‘பகவதி’ திரைப்படமும் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது. விஜய் நடித்த முழு ஆக்ஷன் படங்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால், வெளியான காலகட்டத்தில் பெரிதளவில் வெற்றிப் படமாக அமையவில்லை.
இப்போது, 22 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘பகவதி’ திரைப்படம் மார்ச் 21ம் தேதி தமிழகத்தில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மதன் மூவிஸ் என்ற விநியோக நிறுவனம் இதை ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில், ‘சச்சின்’ படம் இந்த கோடைக்காலத்தில் திரும்ப வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே ‘பகவதி’ திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.