Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கெத்தாக ‘கோட்’ மோதிரத்தை அணிந்து போஸ் கொடுத்த தளபதி விஜய்… அன்பு பரிசாக அளித்த தயாரிப்பாளர் டி.சிவா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் ரூ.450 கோடி வசூல் செய்துள்ளது. இப்போது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த படத்திற்கு அடுத்ததாக, எச். வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் விஜய் நாளை முதல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக, இப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே மும்பையிலிருந்து சென்னைக்கு வந்துள்ளார்.

இதனிடையே, விஜய்யின் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கங்களில் ‘கோட்’ என்ற பெயரைக் கொண்ட மோதிரத்தை அணிந்திருக்கும் அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த மோதிரம் ‘கோட்’ படத்தில் நடித்தபோது நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் டி.சிவா பரிசாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News