எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலத்தின் பையனூர் பகுதியில் தொடங்கியுள்ளது. அங்கு, அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘ஒன் லாஸ்ட் சாங்’ என்ற பாடலுக்கு, 500 நடன கலைஞர்களுடன் இணைந்து விஜய் நடனமாடி இருக்கிறார்.
இந்த பாடலை, ஏற்கனவே விஜய்க்காக ‘நான் ரெடிதான்’ என்ற பாடலை எழுதிய அசல் கோளார் எழுதியுள்ளார். இந்த பாடல், விஜயின் 69வது படத்தின் தொடக்கப்பாடலாக அமைந்துள்ளதால், ரசிகர்கள் திரையில் எழுந்து ஆடத் தகுந்த அளவுக்கு துள்ளலான இசையில் அனிருத் கம்போஸ் செய்திருக்கிறார்.
இந்த பாடலின் முழுப்படப்பிடிப்பும் நாளை நிறைவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன