Friday, January 24, 2025

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி 69 படக்குழு… வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “தி கோட்” திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 69’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

இந்த தளபதி 69 படம்தான் விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறப்படுகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கின்ற இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்ற இப்படத்தில் ‘அனிமல்’ மற்றும் ‘கங்குவா’ படங்களில் வில்லனாக சிறப்பாக நடித்த பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படம் அரசியல் சார்ந்த கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில், ‘தளபதி 69’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News