Monday, December 30, 2024

தெலுங்கு திரையுலகம் பங்கேற்கும் கேம் சேன்ஜர் படத்தின் ப்ரோமோஷன் விழா… ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்-க்கு அழைப்பு! #GameChanger

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடித்த வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் ஒரு பிரம்மாண்ட விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த வாரக் கடைசியில் அந்த விழா நடக்கும் என கூறப்படுகிறது.

நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் நடிக்கும் இப்படத்தின் விழாவில் ஒட்டுமொத்த டோலிவுட் பிரபலங்கள் மற்றும் சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து நடிகர்களும் பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், சிரஞ்சீவியின் தம்பி மற்றும் ஆந்திர மாநில துணை முதல்வரான பவன் கல்யாணை சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கியுள்ளார். பவன் கல்யாணும் விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News