‘பலே வெள்ளையத் தேவா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தன்யா ரவிச்சந்திரன். நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான இவர், அதன் பின்னர் ‘பிருந்தாவனம், கருப்பன், ரசவாதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157920.png)
தற்போது, அருண் விஜய்க்கு ஜோடியாக ‘ரெட்டை தல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு, அருள்நிதி நடிக்கும் புதிய படத்தில் அவருடன் இணைந்து நடிக்க உள்ளார் தன்யா ரவிச்சந்திரன்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158112-1024x654.png)
குத்துச்சண்டை கதையை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தை இயக்குகிறார் முத்தையா. இவர் முன்பாக ‘குட்டிப்புலி, கொம்பன், மருது, தேவராட்டம்’ போன்ற பல வெற்றி பெற்ற படங்களை இயக்கியவர். இந்த புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியிடப்படும்.