Touring Talkies
100% Cinema

Tuesday, March 18, 2025

Touring Talkies

நடிகரும் கராத்தே மாஸ்டரேமான ஹுசைனிக்கு நிதியுதவி அளித்த தமிழ்நாடு அரசு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கராத்தே மாஸ்டரான ஹுசைனி சினிமாவில் பல நடிகர்களுக்கு கராத்தே பயிற்சி கொடுத்திருக்கிறார். கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டோரின் படங்களிலும் நடித்திருக்கிறார். கே.பாலசந்தர் இயக்கிய ‘புன்னகை மன்னன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லி குற்றமில்லை படங்களில் நடித்தார். ரஜினி நடித்த ‘ப்ளட் ஸ்டோன்’ என்ற ஹாலிவுட் படத்திலும் விஜய்யுடன் ‘பத்ரி’ படத்திலும், விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடித்திருந்தார்.இவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் அவருக்கு 5 லட்சம் மருத்துவ உதவி செய்யப்பட்டுள்ளது. இதனை துணை முதல்வர் உதயநிதி வழங்கி உள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து தற்போது ஹுசைனி வீடியோ வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News