Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

விடுதலை 2 சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு! #Viduthalai2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற பல திறமையான நடிகர்களும் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறன் “விடுதலை” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லரும், பாடல்களும் அண்மையில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இரண்டாம் பாகத்திற்கும் இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றியுள்ளார்.

“விடுதலை 2” நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தமிழக அரசு திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கான அனுமதி அளித்துள்ளது. இதனால் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. படம் வெளிவரும் முன்பே டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தைப் போலவே, இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெறும் என ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.

- Advertisement -

Read more

Local News