தமிழ்த் திரையுலகத்தில் 50 ஆண்டுகளாக தனிப் பெரும் சாதனையுடன் வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். அவர் திரையுலகில் அறிமுகமாகி ஆகஸ்ட் 15ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அவருக்கு இப்போதே அரசியல் பிரபலங்களும், சினிமா ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் துணை முதல்வரும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,
கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.
நாளை வெளியாகும் அவருடைய ‘#கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற Mass Enterntainer-ஆக #Coolie திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.