சின்னத்தம்பி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘சென்னை பைல்ஸ்: முதல் பக்கம்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை அனீஸ் அஷ்ரப் இயக்கியுள்ளார். இதில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா மற்றும் அனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகை ஷில்பா மஞ்சுநாத் கூறியதாவது, நான் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவள் என்றாலும், தமிழ் சினிமா எனக்கு வாய்ப்பு வழங்கி, அழகு பாராட்டிய இந்த மண்ணுக்கு என்றென்றும் நன்றிக்கடன் உள்ளேன். முதன்முதலில் நடித்தபோது எனக்கு தமிழ் தெரியவில்லை, வசனமும் சரியாக வரவில்லை. அதே நேரத்தில், வேறொரு மாநிலத்திலிருந்து வந்த எனது திறமையை இங்கே மதித்தார்கள்.
தமிழ் சினிமா துறையில் மட்டுமே எந்த விதமான பேதங்களையும் கடந்து, திறமையிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த வகையில், தமிழ் ரசிகர்கள் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இனிமேலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களை வெல்வதற்காக முயற்சி செய்வேன். தொடர்ந்து வாய்ப்பளிக்கும் தமிழ் திரையுலகிற்கு எனது மனமார்ந்த நன்றி. ‘காளி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘சிங்க பெண்ணே’ போன்ற படங்களில் நான் நடித்துள்ளேன். எதிர்காலத்திலும் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பேன்” என்றார்.