தமிழில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ என்ற திரைப்படத்தில் நடிப்பதை முடித்துள்ள நடிகர் சூர்யா, தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவருடைய மனைவியான நடிகை ஜோதிகா சில வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் கிழக்கு ஆப்பிரிக்காவின் அழகிய தீவான ஷீஷெல்ஸ்-க்கு விடுமுறை பயணமாக சென்றிருந்தார்கள். அங்கு இயற்கையின் அழகை ஹெலிகாப்டர் சவாரியில் ரசித்து, அந்த தீவின் பாரம்பரிய உணவுகளையும் ருசித்து மகிழ்ந்துள்ளனர்.
அந்த அமைதியான சூழலில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, அந்த வீடியோவுடன் “சொர்க்கத்தில் இன்னொரு நாள் நாம் இருவரும்…” எனும் கேப்ஷனையும் இணைத்துள்ளார். இவரது இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் விரைவாக பரவி வைரலாகி வருகிறது.