நடிகர் சூர்யா தற்போது தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இதில், நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, சூர்யாவின் 46வது படத்தை ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கவிருக்கிறார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்கு தற்போது ‘சூர்யா 46’ என்ற தற்காலிகப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இதில், கதாநாயகியாக மமிதா பைஜு நடிக்க உள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்ற உள்ளார்.
இந்த நிலையில், ‘சூர்யா 46’ திரைப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும், படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்குள் வெளியிடும் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.