சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜ் ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ள படம் ‘ரெட்ரோ’, கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் இந்தப் படத்துக்காக மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். ‘ரெட்ரோ’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியாவது என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 500 திரையரங்குகளில் படம் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது. 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் முன்பதிவுகளின் போது நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும், கோடை விடுமுறையின் காரணமாக படம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் திரையரங்க உரிமையாளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.