கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ரெட்ரோ’. இப்படத்திற்கு வந்த விமர்சனங்கள் பெரும்பாலும் எதிர்மறையானவையாக இருந்தன. ஆனால், முதல் சில நாட்களில் இப்படம் வசூலில் நல்ல முறையில் செயல்பட்டதாக தகவல்கள் வந்தன.
படம் வெளியாகிய அடுத்த தினமே, 46 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து நான்கு நாட்களாக எந்த புதிய வசூல் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது இப்படம் 104 கோடி வசூலித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது உண்மையில் லாபமானதா, நஷ்டமானதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், நாளை சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் இப்படம் தொடர்பான நன்றி கூறும் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திரைப்படம் வெளியான பிறகு, சூர்யா சென்னையில் இல்லாமல் மும்பைக்கே சென்று விட்டார். ஆனால், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மட்டும் சில திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களுடன் நேரில் சந்தித்து உற்சாகம் ஏற்படுத்தினார்.