நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படமான ‘ரெட்ரோ’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். அவருடன் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்படவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் காமிக்ஸ் வடிவில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து, வாரந்தோறும் ஒரு எபிசோட் என்ற முறையில் படக்குழுவினர் அந்த காட்சிகளை பகிர்ந்து வருகின்றனர். தற்போது 10வது எபிசோட் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே பரவலாகப் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி, ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.