நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் தனது 45வது படமான ‘கருப்பு’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனது 46வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பேட்டியில், இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படம் பற்றி கூறுகையில், இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப திரைப்படமாக உருவாகி வருகிறது என்றும், படத்தில் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சூர்யா இந்த படத்தில் நடித்துள்ள கதாபாத்திரம், அவரது முந்தைய ‘கஜினி’ படத்தில் நடித்த சஞ்சய் ராமசாமியின் கதாபாத்திரத்தை போன்ற, அதே அளவு வலிமையானதும் உணர்ச்சிகரமானதாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.