Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சூர்யா சாரின் கண்கள் தான் பேசும்… அவர் மிகச்சிறந்த மனிதர்… நடிகை திஷா பதானி டாக்! #KANGUVA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் மூலம் சிறுத்தை சிவா இயக்கத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி தமிழ்த்திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் திஷா தற்போது தமிழில் தனது அறிமுகமாகி உள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான YOLO சாங் மூலம் சூர்யாவுடன் நடனமாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை திஷா பதானி.

இந்நிலையில், கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் திஷா பதானி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “சூர்யா சார் மிகச் சிறந்த மனிதர். அவரின் கண்கள் பலவற்றை பேசும். அவரிடமிருந்து என்னால் இயன்ற அளவுக்கு கற்றுக்கொள்ள முயற்சித்தேன். சூர்யா சார் மிகவும் அன்பானவர், மிகவும் பணிவானவர்,” என்று திஷா பதானி கூறியுள்ளார்.

திஷாவின் இந்த வார்த்தைகளை கேட்டு ரசிகர்கள் உண்மை தான் . சூர்யா அண்ணாவின் கண்கள் தான் பேசும். திஷா அதை கவனித்திருப்பது மகிழ்ச்சியானது. தலைக்கனம் இல்லாதவர் சூர்யா அண்ணா என்று மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News