நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லேன் நடித்த ‛லோகா சாப்டர் 1: சந்திரா’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது வரை 00 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்து உள்ளது.

இப்படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ‛பிரேமலு’ புகழ் நஸ்லென் இருவரும் தங்களது இயல்பான நடிப்பால் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் வெற்றி விழாவில் நஸ்லென் பேசுகையில்:, இந்த வெற்றிக்கு நான் மிகவும் நன்றியுள்ளவன். எனக்கே நம்ப முடியாத அளவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று காலை நடிகர் சூர்யா சாரும், ஜோதிகா மேடமும் வீடியோ கால் செய்து படம் சிறப்பாக உள்ளது என்று வாழ்த்தினார்கள். அது எனக்கு மறக்க முடியாத தருணமாக இருந்தது. என் வாழ்க்கையில் அதிசயம் நடப்பதைபோல் உணர்கிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.