தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகர் சூர்யா. இவர் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘காக்க காக்க’, ‘சில்லுனு ஒரு காதல்’, ‘மாயாவி’ போன்ற திரைப்படங்களில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்துள்ளார். இவர்கள் ஒரே படங்களில் பணியாற்றிய காலத்தில் காதல் மலர்ந்தது. அதன் பிறகு, 2006-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.

தியா மற்றும் தேவ் இருவரும் பள்ளியில் கல்வி பயிலும் நோக்கில், சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சென்னை நகரத்தை விட்டு மும்பைக்கு குடியேறினர். இந்த முடிவு சிலரின் விமர்சனத்தையும் சந்தித்தது. திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா, தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் நடிப்புக்கு திரும்பி தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் சிறப்பாக நடித்துவருகிறார்.
இந்த நிலையில், சூர்யாவின் மூத்த மகள் தியா தனது பள்ளி கல்வியை முடித்துள்ளார். இதற்கான பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சான்றிதழ்களுடன் சூர்யா, ஜோதிகா மற்றும் சிவக்குமாரை உள்ளடக்கிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாகக் காட்சியளிக்கிற புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வழியாக பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.