லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தில், நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா போன்ற பான்-இந்தியா நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்த இப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ₹151 கோடி வசூலித்து சாதனை படைத்தது மட்டுமின்றி நல்ல வசூலை குவித்து வருகிறது. இந்த சாதனை மூலம் விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்ததிருந்தது.
மேலும் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை கூறப்படுகிறது. அந்த வகையில், நான்கு நாட்களில் ‘கூலி’ திரைப்படம் உலகளவில் ₹404 கோடி வசூல் செய்துள்ளதாக, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.