லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடிக்கும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படத்தின் முதல் அறிவிப்பு 2023ஆம் ஆண்டு வெளியானது, அதன்பிறகு, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், படத்தின் தலைப்பு மற்றும் சிறப்பு வீடியோ வெளியாகின. பின்னர், ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. பல்வேறு கட்டங்களாக முன்னேறிய படப்பிடிப்பு, ஐதராபாத், விசாகப்பட்டிணம், ஜெய்ப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

பெருமளவு 9 மாத காலம் எடுத்துக்கொண்டு படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, பூஜா ஹெக்டே ஒரு பாடலில் சிறப்புத் தோற்றத்துடன் இணைந்துள்ளார்.2025ம் ஆண்டு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால், படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.