லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‛கூலி’. இப்படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சவுபின் சாகிர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கேமியோ ரோலில் அமீர்கான் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நாளை (02/08/2025)நடக்கிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‛ஏ’ சான்று வழங்கியுள்ளது. பொதுவாக ரஜினி படங்களுக்கு வயது வித்தியாசமின்றி குடும்பம் குடும்பமாக மக்கள் அதிகம் வருவார்கள். இப்பஞி இருக்கையில் இந்த படத்திற்கு ‛ஏ’ சான்று கிடைத்திருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் அதிகம் ஆக்ஷன் மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் உள்ளதே தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் வழங்க காரணம் என கூறப்படுகிறது. பொதுவாகவே லோகேஷ் படங்களில் ஆக்ஷன் அதிகமாக இருக்கும் ஆனால் இப்படத்தில் இன்னமும் கூடுதலாக இருப்பதாக கூறப்படுகிறது.