ரஜினிகாந்த் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ள ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் சாகிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர் அமீர்கானும் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. மொத்தம் 3 நிமிடம் 2 விநாடிகள் நீளமுடைய இந்த டிரைலரில் மாஸ் மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளன.
இந்த படத்தில் முக்கிய வில்லனாக நாகார்ஜுனா நடித்துள்ளார். உலகளவில் சட்டத்திற்கு புறம்பான சில செயல்களில் நாகார்ஜுனா மற்றும் அவரது குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் செயற்பாடுகளை சத்யராஜ் நடித்துள்ள ஒரு அண்டர் கவர் அதிகாரி மறைமுகமாக கண்காணிப்பதை போல் தெரிகிறது. இந்நிலையில் அவருக்கு ஏற்படும் பிரச்சினையின் போது அவரின் நண்பரான ஏற்படும் ரஜினிகாந்த் அதிரடியாக என்ட்ரி கொடுத்து எதிரிகளை முற்றிலும் அழிக்க முற்படுகிறார் என ட்ரெய்லர் உணர்த்துகிறது.
நடிகர் சத்யராஜின் மகளாக நடித்துள்ளார். ஸ்ருதிஹாசன். சவுபின் சாகிர் மற்றும் சிறப்பு தோற்றத்தில் வருகிற அமீர்கான் ஆகியோரின் காட்சிகள் ஒட்டுமொத்தமாக திரைக்கதையை வலுப்படுத்துகின்றன. கதையின் முக்கியக் கருவாக ஒரு விலையுயர்ந்த கை கடிகாரம் மற்றும் துறைமுகம் சார்ந்த களம் முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது. அதிரடி ஆக்ஷன் நிறைந்த ட்ரெய்லர் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.