Touring Talkies
100% Cinema

Monday, June 16, 2025

Touring Talkies

‘கண்ணப்பா’ படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் மோகன்பாபுவை பாராட்டி வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும் நடிகருமான விஷ்ணு மஞ்சு தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ‘கண்ணப்பா’. சிவ பக்தர் கண்ணப்ப நாயனரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படமானது ஒரு புராணக் கதையை மையமாகக் கொண்ட பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.

 இப்படத்தில் மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன் பாபு, சரத்குமார், பிரீத்தி முகுந்தன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 27ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தை நடிகர் ரஜினிகாந்திடம் காண்பித்துள்ளார்கள் விஷ்ணு மஞ்சு . இதுகுறித்து அவர், “கண்ணப்பா படத்தை ரஜினி சார் பார்த்தார். படம் முடிந்ததும் அவர் என்னை கட்டியணைத்து, படம் மிக நன்றாக இருக்கிறது, எனக்குப் பிடித்தது என்று தெரிவித்தார். ஒரு நடிகராக இதுபோன்ற ஒரு தருணத்திற்கு நான் 22 ஆண்டுகள் காத்திருந்தேன். இது எனக்கு ஒரு ஆசீர்வாதமான அனுபவமாக இருந்தது. சிவபெருமானின் மாயையை இந்த உலகம் காண தயாராக இருக்கிறது என கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News