தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகராக இருந்தும் இன்றைய இளம் நடிகர்களுடன் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வருபவர் பாலகிருஷ்ணா. அவர் சினிமா பயணத்தைத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், திரையுலகினரும், ரசிகர்களும் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அதில் நடிகர் ரஜினிகாந்தும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: “பாலகிருஷ்ணா என்றாலே அது பாசிட்டிவிட்டியை குறிக்கும். அவர் பேசும் பன்ச் வசனங்களை அவரைத் தவிர வேறு யாரும் சொன்னால் அந்த அளவுக்கு தாக்கம் உண்டாகாது. பாலையா எங்கு இருந்தாலும் அங்கே சிரிப்பும் மகிழ்ச்சியும் இருக்கும். அவருக்கே அவரே போட்டி. அவர் நடித்த படம் வெற்றி பெற்றால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பிற நடிகர்களின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அதுவே அவருடைய மிகப்பெரிய பலம். சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்காக உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்தார்.