பிரபல தெலுங்கு இயக்குநரான கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் சன்னி தியோல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ‘ஜாத்’ திரைப்படம் கடந்த 10ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெர், ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரந்தீப் ஹுடா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையிலும் சில காட்சிகள் உள்ளதாக புகார்கள் எழுந்தன.
இந்தப் புகார்கள் எழுந்ததையடுத்து, குறித்த காட்சிகளை படக்குழு நீக்கியது. இந்நிலையில், இப்படம் வசூல் ரீதியாக சதம் அடைந்துள்ளது. அதன்படி, ‘ஜாத்’ திரைப்படம் வெளியான 12 நாட்களிலேயே ரூ.102 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.