சுந்தரி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கேப்ரில்லா செல்லஸ். சினிமாவில் ஐரா, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கேமராமேன் சுருளி என்பவரை திருமணம் செய்து கொண்ட கேப்ரில்லாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதையடுத்து குழந்தையின் கையை பிடித்தபடி ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார்.
