Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கலகலப்பு 3ல் களமிறங்கிய சுந்தர் சி… வெளியான முக்கிய அப்டேட்! #Kalakalappu 3

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கலகலப்பு மற்றும் கலகலப்பு-2 படங்களை இயக்கிய சுந்தர்.சி, தற்போது அந்த தொடரின் மூன்றாவது பாகமான கலகலப்பு-3 படத்தை இயக்க உள்ளார். இது தொடர்பாக நடிகை குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். இந்த படத்தை துபாயை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிக்க உள்ளார்.

கண்ணன் ரவியுடன் இணைந்து குஷ்பூவின் அவ்னி சினி மேக்ஸ் நிறுவனமும் கலகலப்பு-3 படத்தின் தயாரிப்பில் பங்கேற்கிறது. இப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் 2025ஆம் ஆண்டில் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கண்ணன் ரவி இதற்கு முன்பு தமிழில் சாந்தனு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘ராவணக் கோட்டம்’ படத்தையும் தயாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News