Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கதாநாயகனாக கலக்கவரும் சுந்தர் சி… ரிலீஸ்க்கு தயாரான வல்லான்! #Vallan

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கட்டப்பாவை காணோம்” படத்தை இயக்கிய மணி செய்யோன் இயக்கியுள்ள புதிய திரைப்படம் “வல்லான்”. இப்படத்தில் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் தன்யா ஹோப், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

வி.ஆர். டெல்லா பிலிம் பேக்டரி சார்பில் வி.ஆர். மணிகண்டராமன் தயாரித்த இப்படத்தில், சுந்தர் சி ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கொலையின் காரணங்களை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து கண்டுபிடிக்க முயற்சிக்கும் ஒரு திகில் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

2023-ஆம் ஆண்டில் ரிலீசுக்கு தயாரான இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. தற்போது, இப்படம் வரும் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் சுந்தர் சி இயக்கிய “மதகஜராஜா” திரைப்படம் 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வெளியானது மற்றும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து “வல்லான்” திரைப்படமும் 2 ஆண்டுகள் கழித்து திரையரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

Read more

Local News