90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு, அதே காலகட்டத்தில் இயக்குனராக தனது பயணத்தைத் தொடங்கிய சுந்தர் சி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.


நேற்றுடன் அவர்கள் திருமணமாகி 25 ஆண்டுகள் அற்புதமாக நிறைவு பெற்றுள்ளதால், இருவரும் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர். மேலும், சுந்தர் சி தனது முடியை காணிக்கையாக வழங்கி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சிறப்பு நாளை பற்றி குஷ்பு தனது உணர்வுகளை பகிர்ந்து, இன்று, என் 25வது திருமண நாளில், எனது திருமணப் புடவையை மீண்டும் அணிவதில் பெருமை கொள்கிறேன். எங்கள் நாளை பழனி முருகப் பெருமானின் ஆசீர்வாதத்துடன் தொடங்குவதற்குக் காட்டிலும் சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது. இன்று நாங்கள் இந்த நிலையிலிருக்கிறோம் என்றால், அது முருகனின் பேராசீர்வாதத்தால் தான். அவரது அருள் இல்லாமல் எதுவும் நடக்காது” என்று தெரிவித்துள்ளார்.