சமீபத்தில் ஹாலிவுட்டில் வெளியான “ஸின்னர்ஸ்” (Sinners) எனும் திரைப்படம் இப்போது இந்தியாவிலும் வெளியானது. இந்தியாவில் வெளியான உடனே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படம் குறித்து இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது கண்டனத்தை மீண்டும் சென்சார் வாரியத்துக்கு எதிராக வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: “புகைபிடித்தல் மற்றும் மதுபானம் போன்ற காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்களை கட்டாயமாகக் காட்ட வேண்டிய அவசியமில்லை. இது பட இயக்குநர் உருவாக்கிய மன அழுத்தத்துடன் பயணிக்க viewers-க்கு இடையூறாக இருக்கிறது. அந்த எச்சரிக்கைகள் படம் பார்க்கும் அனுபவத்தையே பாதிக்கின்றன. ஏன் அவசியமில்லாத அந்த வாசகங்களை காட்சிக்கு இடையில் காட்ட வேண்டும்?” என்றார்.
இதே போல பத்து ஆண்டுகளுக்கு முன் அவர் இயக்கிய ‘அக்லி’ என்ற படத்தில் கூட இப்படியான எச்சரிக்கை வாசகங்களைச் சேர்க்கும்படி சென்சார் வாரியம் வற்புறுத்தியபோது, அதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனாலும், அந்த எச்சரிக்கைகளை சேர்த்த பிறகே படத்தை வெளியிட முடிய வந்தது குறிப்பிடத்தக்கது.