பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி நடித்த ‘தங்கலான்’ படத்தில், மாளவிகா மோகனன், ஆரத்தி எனும் தங்கத்தை பாதுகாக்கும் தேவதையாக நடித்திருந்தார். இப்படத்தில், எருமை மாட்டின் மீது ஏறி சண்டை போடுவது, சிலம்பம் வைத்து சண்டை போடுவது போன்ற துள்ளலான காட்சிகளில் அவர் மாஸ் காட்டியிருந்தார்.
இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். வரும் செப்டம்பர் 20ம் தேதி மாளவிகா மோகனன், சித்தாந்த் சதுர்வேதி இணைந்து நடித்த ‘யுத்ரா’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
படத்தின் புரமோஷனுக்காக, மாளவிகா மோகனன் அதிகளவில் கிளாமர் காட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.