உலகளாவிய அளவில் மிகுந்த புகழ் பெற்ற சினிமா விருதுகளில் முக்கியமானதாக கருதப்படுவது ஆஸ்கர் விருதாகும். இதுவரை அந்த விருதுகளில் ‘ஸ்டன்ட் டிசைன்’ எனும் பிரிவு சேர்க்கப்படவில்லை.

ஆனால், 2029ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 100வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இந்த புதிய பிரிவு சேர்க்கப்பட உள்ளது. இதுபற்றி அவர்கள் எக்ஸ் சமூக வலைதளத்தில், “திரைப்படங்களின் மாயாஜாலத்தில் ஒரு முக்கியமான பகுதியாக சண்டைக் காட்சிகள் எப்போதும் இருந்து வருகின்றன. இப்போது அவை ஆஸ்கர் விருதுகளின் ஓர் அங்கமாக இருக்கின்றன.
ஸ்டன்ட் வடிவமைப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக, அகாடமி ஒரு புதிய வருடாந்திர விருதை உருவாக்கியுள்ளது. இந்த விருது 2028ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவுள்ளது. அதற்காக 2027ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் இருந்து தேர்வு செய்யப்படும்,” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.திரைப்படங்களில் தங்கள் உயிரை பொருத்தி சண்டைக் காட்சிகளை உருவாக்கும் சண்டை கலைஞர்களுக்கு மரியாதையாக இந்த ‘ஸ்டன்ட் டிசைன்’ பிரிவை ஆஸ்கர் விருதுகளில் இணைத்திருப்பது சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.