இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழும் மிருணாள் தாகூர்,முன்னணி பாலிவுட் நடிகை பிபாஷா பாசு ஆண்களைப் போல தசைகளை வைத்துள்ளார், அவரை விட நான் சிறந்தவள்” என்று பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கருத்துக்கு பிபாஷா பாசுவின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், பிபாஷா பாசு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், வலிமையான பெண்கள் அனைவரையும் உயர்த்துவார்கள்.
அழகான பெண்களே, உங்கள் தசைகளை உறுதியாக்குங்கள். அதுவும் பெண்மைக்கு அழகுதான். பெண்கள் உடல் ரீதியாக வலிமையடையக் கூடாது என்ற முட்டாள்தனமான எண்ணத்தை மாற்றுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த விவாதம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.