வெற்றிமாறன் பிறந்த நாள் (செப்டம்பர் 4) முன்னிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது எக்ஸ் பக்கத்தில், “வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றிமாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்க” எனக் குறிப்பிட்டு, சிம்பு நடிக்கும் STR 49 பட அப்டேட்டை வீடியோவுடன் வெளியிட்டார்.

சமீபத்தில் ஒரு விருது விழாவில் Most Celebrated Hero in Digital என்ற விருது பெற்ற சிம்பு, வீடியோவில், “STR 49 அப்டேட் வெற்றிமாறன் சாரிடம் கேளுங்கள். ப்ரோமோ வீடியோ ரெடியாக உள்ளது, எப்போது வெளியாகும் என தெரியவில்லை எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில், சிம்புவின் ரசிகர்களின் அன்புவேண்டுகோளுக்கிணங்க STR & வெற்றிமாறன் படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும். ஆகையால் சென்சார் பணிகள் நிறைவுற்று, விரைவில் உங்கள் கண்முன்னே அந்த மாபெரும் முன்னோட்டம் வெளிவர உள்ளது. இதுவே STR-வெற்றிமாறன் கூட்டணி மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் அன்பிற்கும் எங்களின் நன்றியை தெரிவிக்கும் சிறப்பு தருணமாகும் என்றுள்ளார்.