மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர், திரையுலகில் நட்சத்திர வாரிசுகள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்து திறந்த மனம் திறந்துள்ளார்.

அவர் இதுகுறித்து பேசுகையில், ஒரு நட்சத்திர குடும்பத்தில் பிறந்தவர்கள் போராடுவதில்லை என்ற கருத்து தவறு. மக்கள், நட்சத்திர குடும்பம் சாராதவர்கள் வெற்றி பெறுவது பற்றிச் சொல்ல விரும்புகிறார்கள். ஆனால் நட்சத்திர வாரிசுகளும் கடின உழைப்புடன் தங்களை நிரூபிக்க வேண்டிய சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை பெரும்பாலும் மறந்து விடுகிறார்கள். ஒவ்வொரு படத்திலும் நாங்கள் நம்மை நிரூபிக்க வேண்டிய அழுத்தம் எப்போதும் இருக்கும். நட்சத்திர வாரிசாக இருப்பது ஒரு வாய்ப்பு என்றாலும், அதற்கேற்ற உழைப்பும் ரிஸ்கும் தேவை,” என்று கூறினார்.
ஜான்வி தென்னிந்திய திரையுலகில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்த தேவரா படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் ராம் சரணுடன் பெத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.