ஸ்ரீ லீலா நடிப்பில் 2019ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள் வரை ஓடி வெற்றிப் பெற்ற படம் ‘கிஸ்’. இந்தப் படம் தற்போது தமிழில் ‘கிஸ் மீ இடியட்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.இதில் கன்னடத்தில் நடித்த வீராட், ஸ்ரீலீலா ஆகியோரே இதிலும் நடிக்கின்றனர். கூடவே ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி என இன்னும் ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். ஜெய்சங்கர் ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார், பிரகாஷ் நிக்கி இசை அமைக்கிறார்.
