தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் நவீன் பொலிஷெட்டி, தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை கொடுத்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், தற்போதைய இயக்குனர்களால் மிகவும் விரும்பப்படும் நடிகராக மாறியுள்ளார்.

சமீபத்தில், இவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், சில நாட்கள் நடிப்பில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்தார். தற்போது முழுமையாக குணமடைந்துள்ள நவீன் பொலிஷெட்டி, தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் ‘அனகனக ஓக ராஜு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் மாரி இயக்குகிறார். இதில் முதலில் நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால், படப்பிடிப்புக்கான கால அட்டவணையில் சிக்கல் ஏற்பட்டு நவீன் பொலிஷெட்டியால் தான் அவர் இப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், படக்குழு டீசர் ஒன்றை வெளியிட்டு புதிய கதாநாயகியை அறிவித்துள்ளது. அதன்படி, மீனாட்சி சவுத்ரி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் கடைசியாக விஜய்யின் கோட் படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.