Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ரிஷப் ஷெட்டி நடிக்கும் சத்ரபதி சிவாஜி படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னட திரையுலகில் பிரபலமான இயக்குநரும், நடிகரும் ஆக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. அவர் தானே இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கண்டது. இதன் தொடர்ச்சியாக, தற்போது ‘காந்தாரா 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.

இந்த நேரத்தில், ரிஷப் ஷெட்டி, பிரசாந்த் வர்மா இயக்கும் ‘ஜெய் அனுமான்’ படத்திலும், சந்தீப் சிங் இயக்கும் “சத்ரபதி சிவாஜி மஹராஜ்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. மேலும், மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் தயாராகி வருகிறது.

இந்த நிலையில், சத்ரபதி சிவாஜியின் 395-வது பிறந்த நாளை முன்னிட்டு, படக்குழுவினர் ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படம் வருகிற 2027-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. தற்போது, இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News